கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை !
கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புரதம், வைட்டமின் பி, கால்சியம் மற்றும் சல்ஃபர் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இது கூந்தல் நரைப்பதை தடுக்க உதவுகிறது. முடி உதிர்வு, பொடுகுத் தொல்லை, உச்சந்தலை அரிப்பு என தலைக்கு ஏற்படும் பல பிரச்னைகளை போக்கும் சிறந்த டானிக் ஆக செயல்படுகிறது.
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் ஒரு கப் தயிர் ஆகியவற்றை ஒரு மிக்சியில் சேர்த்து பேஸ்ட் போன்று அரைக்கவும்.
அதை கூந்தல் முழுவதும் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவிட்டு, வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கவும். கூந்தல், மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கக்கூடும்.
அரை கப் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை எடுத்து மிக்சியில் அடித்து, துணியில் வடிக்கட்டவும்.
இதை பஞ்சில் நனைத்து கூந்தல் வேர்களில் தடவவும். பின் 20- 30 நிமிடங்கள் ஊறவிட்டு தலைக்கு குளிக்கலாம். வெங்காய நாற்றம் பிடிக்காதவர்கள் ஷாம்பூ கொண்டு குளிக்கலாம்.
ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை ஒரு டம்ளர் தண்ணீரில் முதல் நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அடுப்பில் கொதிக்க வைத்து பாதியாக வற்றியவுடன் குடித்து வர நாளடைவில் கூந்தல் உதிர்வை தவிர்க்கலாம்.