குடலிறக்க அறிகுறி என்னென்ன அறிவோமா?
வயிற்று தசைகள் பலவீனமடைவதால் குடலிறக்கம் ஏற்படுகிறது. இன்றைய சூழலில் குடலிறக்கம் பரவலாக காணப்படுகிறது.
மார்பு மற்றும் இடுப்புக்கு இடையில் வயிற்றுப் பகுதியில் குடலிறக்கம் ஏற்படுகிறது.
நாள்பட்ட தொடர் இருமல், மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு இருப்பவர்களுக்கும், அதிக எடை துாக்குபவர்களுக்கும் குடலிறக்கம் வரக்கூடும்.
குடலிறக்கம் பாதிப்பு ஏற்பட்டால் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு காய்ச்சல் ஏற்படும்.
நடக்கும்போது, ஓடும்போது மாடிப்படி ஏறும்போது ஏதோ ஒன்று பிடித்து இழுப்பது போன்ற வலி ஏற்படும்.
குடலிறக்கத்திலும் இடுப்பு குடலிறக்கம், வென்ட்ரல் குடலிறக்கம், தொப்புள் குடலிறக்கம், எபிகாஸ்ட்ரிக் குடலிறக்கம் என சில வகை உண்டு.
நமது உடலில் சில மாற்றங்களால் இருமல் தானே, மலச்சிக்கல் தானே என்று கவனக்குறைவாக இருக்கக்கூடாது. இந்த அறிகுறி இருந்தாலே அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும்.