ஹார்ட் அட்டாக் சிகிச்சையின் கோல்டன் ஹவர்... என்ன செய்யணும்?

ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது, ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை பெறுவது அவசியமானது.

ஹார்ட் அட்டாக் என்பது ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படும்போது வருகிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தம் செல்லாத சதைகளில் வலி உருவாகும்.

ரத்தத்தை உந்தி செலுத்தும் திறன் குறைந்து இதய தசைகள் இறந்துபோகத் துவங்கும்.

எனவே, ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய வேண்டும். இதற்குப் பல விதமான சிகிச்சை முறைகள் உள்ளன.

இந்த சிகிச்சைக்கான கோல்டன் ஹவர் என்பது அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை அடங்கும்.

பாதிக்கப்பட்டவருக்கு ரத்தக் கட்டை முறிக்கும் மருந்து வழங்கப்பட வேண்டும். மிகவும் தீவிரமான நிலை என்றால் ஆஞ்சியோகிராம் வரை செல்லும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது.

ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.