குழந்தைகளுக்கு செரிமான சிக்கலை தவிர்ப்பது எப்படி?

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு ஜீரணமாக, செரிமானம் சீராக, குடலின் இயக்கத்திற்கு, நார்ச்சத்து அவசியம்.

இது, கீரைகள், பனங்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, முளைகட்டிய சிறுதானியங்கள், சிவப்பரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி போன்றவற்றில் அதிகமுள்ளது.

குழந்தைகளுக்கான உணவில், இவற்றை அடிக்கடி சேர்ப்பது அவசியம்.

ஏனெனில், உடலின் இரண்டாவது மூளையாக கருதப்படும் செரிமான மண்டலத்தில், கழிவுகள் தேங்காமல் இருந்தால் தான், மற்ற உறுப்புகளின் இயக்கம் சீராக நடக்கும்.

அதேவேளையில், 3 - 10 வயதுள்ள குழந்தைகளுக்கு, அதீத சத்துள்ள உணவுகளையும், தினசரி கொடுக்கக் கூடாது.

துவக்கத்தில் வாரம் இரு நாட்கள் கொடுத்து, செரிமான சிக்கல் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். பின், அவ்வுணவை அடிக்கடி கொடுத்து பழக்க வேண்டும்.

அப்போதுதான், அதிலுள்ள நுண்ணுாட்ட சத்துகளை, ஜீரண உறுப்புகளால் பிரித்தெடுக்க முடியும்.

இதில் தொய்வு ஏற்பட்டால், மலச்சிக்கல் ஏற்படலாம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.