கண் நீரழுத்த நோய் யாரை எல்லாம் தாக்கும்!!

கண் நீரழுத்த நோய் என்பது கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரித்து கண் நரம்புகளை பாதிப்பிற்குள்ளாக்கி நிரந்தரமாக கண் பார்வையை பாதிக்கும்.

இது பரம்பரையாக வரக்கூடிய கண் பிரச்னை. மேலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், கிட்ட பார்வை குறைபாடு உள்ளவர்களை பாதிக்கும்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஸ்டீராய்டு மருந்துகளை நீண்ட காலமாக பயன்படுத்துவோரையும் பாதிக்கும்.

50 வயதிற்கு மேற்பட்டவர்களில் 200 பேரில் ஒருவரையும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் 10 பேரில் ஒருவரையும் பாதிக்கும்.

ஆரம்ப நிலையில் கண்ணில் வலியையோ, பார்வை பாதிப்பையோ உண்டாக்காது. பக்கவாட்டு பார்வையை மிகவும் பாதிக்கும்.

ஒரு சிலருக்கு தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி எடுத்தல் இருக்கும். விளக்குகளை சுற்றி வட்டம் போன்ற தோற்றம் போன்ற பார்வை இடையூறுகள் ஏற்படலாம்.

ஆண்டுக்கு ஒரு முறை உள் விழி அழுத்தம், கருவிழி பருமன், கண் நரம்பு சோதனை செய்ய வேண்டும்.

கண் நீரழுத்த நோய் கண்டறியப்பட்டால் சொட்டு மருந்து, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.