சைனஸ் தொல்லையா? காரணமும் தீர்வுகளும்...

நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம்.

அதிலும் மூக்கைச் சுற்றி நான்கு சைனஸ் அறைகள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது நான்கோ பாதிக்கப்படலாம்.

மூக்கடைப்பு, மூக்கில் இருந்து நீர் வடிவது, தும்மல், சளி, தொண்டையில் புண், தலைவலி போன்றவை பொதுவான அறிகுறிகள்

இப்பிரச்னையை கவனிக்காமல் விட்டால், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் உள்ள சிற்றறைகளில் தேங்கிய நீர், மூளை வரை சென்று, மூளைக் காய்ச்சல் வர வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

அதனால் சளி பரிசோதனை செய்து, என்ன பாதிப்பு என கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இரண்டு வாரங்களுக்கு மேல் நீட்டித்தால், எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்து, 'சைனஸ்' அடைப்பை சரி செய்யலாம்.

மின் விசிறிகளில், குளிர்சாதன இயந்திரங்களில், துாசி தேங்காமல் பார்த்துக் கொண்டால், மூக்கில் ஒவ்வாமை ஏற்படாமல் சைனசிலிருந்து தப்பிக்கலாம்

பொதுவாக ஒரு வாரம், மருந்து, மாத்திரை சாப்பிட்டால், சரியாகி விடும். தொடர்ந்து சளி இருக்குமானால், காது, மூக்கு, தொண்டை நிபுணரை சந்திப்பது நல்லது.