கொத்தமல்லி இலையின் ஆரோக்கிய நன்மைகள்
கொத்தமல்லி இலை குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயு அகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவ பயன்களைக் கொண்டது.
வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். செரிமான சக்தியைத் தூண்டி, உணவை நன்கு ஜீரணிக்கச் செய்யும். வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும்.
இதிலுள்ள நார்ச்சத்து, மலக்குடலில் உள்ள தேவையற்ற கசடுகளை வெளியேற்றும்.
புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் மாறும். நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி, கண்ணை பலமடையச் செய்யும். கண் சூடு குறையும்.
மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.
கொத்தமல்லி, நல்ல தூக்கத்தை தரும். மன அமைதியைக் கொடுக்கும்.
இது கெட்ட கொழுப்பு மற்றும், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதால் இதய ஆரோக்கியத்துக்கும், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உகந்ததாகும்.