யானைக்கு மதம் பிடிப்பது ஏன்?

யானைக்கு மதம் பிடிப்பது இயற்கையில் நடப்பதே, குறிப்பாக பருவம் அடைந்த ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒருமுறை மதக்காலம் வரும்.

ஆண் யானைகளுக்கு பாலுணர்வு தொடர்பாக மதநீர் சுரக்கும் போது ஆக்ரோஷமாகவும், ஆபத்தாகவும் காணப்படும்

மதக்காலத்தில் கண், காது இடையே மதநீர் சுரந்து மதம் பிடித்தற்கான அறிகுறி தென்படும். அதைவைத்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

மதக்காலம் பதினைந்து நாள்கள் முதல் மூன்று மாதங்கள் வரை இருக்கும். அதற்குப் பிறகு இயல்புநிலையை அடைந்துவிடும்.

அந்த சமயத்தில் ஆண் யானை பொறுமையிழந்தால் மற்றும் கோபம் கொண்டால் யாராலும் அதைக் கட்டுப்படுத்த முடியாது.

பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை. ஆனால், பாலுணர்வுச் சுரப்பிகள் சுரக்கும்போது இயல்புநிலையிலிருந்து சிறு கோபத்துடன் படபடவென இருக்கும்.