உணவு சாப்பிட்ட உடனேயே ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது?

சாப்பிட்டவுடனேயே தண்ணீர் குடிக்கும்போது, அத்தியாவசிய இரைப்பை சாறுகளை நீர்த்துப்போக செய்வதன் மூலம், செரிமானம் பாதிக்கப்படக்கூடும். இன்சுலின் அளவும் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது, நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கிறது.

சாப்பிட்டதும் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக கொண்டவர்களுக்கு நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கான வாய்ப்பு அதிகமுள்ளது.

உணவு சாப்பிடுவதற்கு குறைந்தப்பட்சமாக 20 நிமிடங்கள் அல்லது அரை மணி நேரத்துக்கு முன்பாகவோ, பின்னரோ தண்ணீர் குடிக்கலாம் என்பது டயட்டீஷியன்களின் அட்வைஸாக உள்ளது.

உங்களை நீரேற்றமாக வைத்திருக்க குறைந்தப்பட்சமாக இரண்டு லிட்., தண்ணீரையாவது உட்கொள்வது முக்கியம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.

இதற்கேற்ப போதிய இடைவெளியில் தண்ணீரை அவ்வப்போது குடிக்கலாம்.

உணவுடன், மோர் மற்றும் தயிர் உட்கொள்ளலாம். இது உடலுக்கு குளிர்ச்சி தரும்; செரிமானத்திற்கு உதவும்.