வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்களை நம்பலாமா?
மருத்துவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் யூகத்தின் அடிப்படையில் அதிகமான கருத்துக்கள் பரவுகிறது.
சமூக ஊடகத்தில் தகவல் தேடுவது தவறல்ல; ஆனால் அதில் கூறப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மையானதா, சரியானதா என்று பார்க்க வேண்டும்.
அறிவு என்பது வேறு, தகவல் என்பது வேறு. மருத்துவம் தொடர்பான தவறான தகவல்கள் வேகமாக பரவுவதால் சிக்கலை ஏற்படுத்துகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஒருவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கலாம்.
பாதிக்கப்பட்டவருக்கு எந்த மருந்து தேவை என்பதை மருத்துவர்கள் தான் கூற வேண்டும்.
கூகுள் மருத்துவர்கள் அதிகரித்து விட்டனர். மருத்துவ துறை பற்றி கூகுளில் தேடும் எல்லாதகவலையும் நம்ப வேண்டாம் எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.