கோடையில் வறண்டு போகும் கண்கள் காக்க சில டிப்ஸ்...
கோடை காலத்தில் உடல் சூடு, மின் திரையை அதிகம் பார்ப்பது, நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் கண்கள் வறட்சியடைகின்றன.
இதனால் கண் எரிச்சல், சிவந்து போதல், அரிப்பு, உறுத்தல், நீர் வடிதல் போன்ற பல பிரச்னைகள் உண்டாகும்.
நீரிழிவு, தைராய்டு கோளாறுகள் மற்றும் வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால் கண் வறட்சியாகும்.
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும்.
ஏசி அறைகளைப் பயன்படுத்தும் மணிநேரங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும். ஏசி வெப்பநிலையை சுமார் 23 டிகிரி C மற்றும் அதற்கு மேல் வைக்கவும்.
தேங்காய் எண்ணெயை கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் 10 -15 நிமிடங்கள் வரை வைத்துக் கொள்ளுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கண்களைக் கழுவிக் கொள்ளலாம்.
உணவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்கலாம்
கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இது வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க உதவும்.
அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது, கண்களில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும்.