கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு

பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது, 100ல் 70 பேருக்கு ஹெச்.பி.வி., எனும் வைரஸ் காரணமாக ஏற்படுகிறது.

இந்த வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதால், இப்புற்றுநோய் எதிர்காலத்தில் வராமல் தடுக்கலாம்.

9 முதல் 45 வயதுள்ள பெண்கள் இத்தடுப்பூசி போடலாம். எனவே, பெற்றோர் தயங்காமல், பெண் குழந்தைகளுக்கு செலுத்திக்கொள்ள வேண்டும்.

எச்.பி.வி., தடுப்பூசி பெண் குழந்தைகள் பூப்பெய்துவதற்கு முன்னதாக செலுத்துவது நல்லது.

அதாவது 9 வயதிலிருந்து 14 வயதிற்குள் செலுத்திக்கொள்ளலாம்.

விரும்பினால் 40 வயது பெண்மணிகளும் செலுத்திக் கொள்ளலாம்.

ஆனால், இந்த மருந்தினால் சிறு வயதில் கிடைக்கும் பலன், பெரியவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும்.