வயது 20க்குள் கர்ப்பமடைந்தால் பிரசவத்தின் போது என்னென்ன பிரச்னைகள் உண்டாகும்?

பொதுவாக 18 முதல் 20 வயதிற்குள் திருமணம் முடிக்கும் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும்.

இதனால், பிரசவ நேரங்களில் ரத்த போக்கு அதிகரிப்பதோடு, மூச்சு திணறலும் ஏற்பட்டு பிரசவத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி விடும்.

குழந்தையும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

இதை தவிர்க்க வயது 21 பூர்த்தியான பின் தான் திருமணம் முடிக்க வேண்டும்.

அப்போது தான் கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை, ரத்த போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

கர்ப்பம் உறுதியான முதல் மாதத்தில் இருந்தே புரதசத்து நிறைந்த பழங்கள், முட்டை வெள்ளை கரு, முளை கட்டிய பயிர்களை தான் அதிகம் சாப்பிட வேண்டும்.

தற்போது பனிக்காலமாக இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு லேசான காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் உடனே டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிடில் மூச்சு திணறல் ஏற்படும்.