மூக்கின் வழியே இறங்கும் மூளை திரவம்! எதனால்?

மூக்கையும், மூளையையும் பிரித்துக் காட்டுவது மெல்லிய எலும்பு. எப்போதாவது தலையில் இடித்துக் கொண்டால், அந்த எலும்பில் லேசாக விரிசல் விழலாம்.

இதனால் மூக்கின் வழியாக மூளை திரவம் வழியலாம். மேலும் தலையில் எந்தப் பகுதியில் அடிபட்டாலும் இப்பிரச்னை வரலாம். இது, 'சி.எப்.எஸ்., லீக்' என்று அழைக்கப்படுகிறது.

ஒரு பக்க மூக்கின் வழியாக நீர் வழிந்தால், மூளையில் உள்ள திரவமா என்பதை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும்.

இந்த திரவம் எலும்பை கரைக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து திரவம் வழிவதால், எலும்பு இன்னும் பலவீனமாகலாம்.

மருந்துகளால் பலன் இல்லாவிட்டால், ஸ்கேன் செய்து, எந்த அளவு விரிசல் உள்ளது என்பதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்யலாம்.

மூக்கின் வழியாக எண்டோஸ்கோபி உதவியுடன் அருகில் இருக்கும் திசுக்களை எடுத்து விரிசலை மூடலாம். தொடையில் இருக்கும் சதையை எடுத்தும் வைக்கலாம்.

இதில் நோயாளிக்கு வலி அதிகமாக இருக்காது; சில நாட்களுக்கு மூக்கடைப்பு இருக்கும். ஒரு மாதம் வரை மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.