நம்மிடமே இருக்கு மருந்து : வெள்ளைப் பூசணி!

வெள்ளைப் பூசணியில் வைட்டமின் பி, சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

'அல்சர்' பிரச்னையால் அவதிப்படுவோருக்கு, வெள்ளைப் பூசணி சாறு உடனடி பலனைத் தரும்.

அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும், 'அசிடிட்டி' பிரச்னையை எதிர்த்து போராடவும் வெள்ளைப் பூசணி சாறு உதவும்

தினமும் காலையில் வெள்ளைப் பூசணி சாறுடன், தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்

வெள்ளைப் பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வந்தால், எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரையும் வெளியேற்றி விடும்; உடல் சூடு தணியும்.

இதில், நீர்ச்சத்து அதிகம் உள்ளது, அதனால், உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்

வெள்ளைப் பூசணி சாறில் தேன் கலந்து, தினமும் காலை - மாலை என, இருவேளை குடித்து வந்தால், ரத்தம் சுத்தமாகும்

சிறுநீருடன் ரத்தம் வெளிவருவது, 'அல்சரால்' உடலினுள் ரத்தக் கசிவு ஏற்படுவது, 'பைல்ஸ்' போன்றவற்றால் ஏற்படும் ரத்தக்கசிவுக்கு வெள்ளைப் பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.