மூன்று பேரின் டி.என்.ஏ.,விலிருந்து பிறந்த ஆரோக்கியமான 8 குழந்தைகள்!

குழந்தைகளுக்கு அரிய நோய்களைப் பரப்புவதைத் தடுக்கும் வகையில், மூன்று பேரின் டி.என்.ஏ.,வைப் பயன்படுத்தும் முறை, பரிசோதனை அடிப்படையில் பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முறையில் ஆரோக்கியமான 8 குழந்தைகள் பிறந்துள்ளதாக, பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுவை, ஒரு தானம் பெற்ற பெண்ணின் இரண்டாவது கருமுட்டையுடன் இணைக்கிறது.

இதன் மூலம் பெறப்படும் குழந்தைகள் பரம்பரை நோயிலிருந்து தப்பிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு இந்த முறை சட்டபூர்வ மாக்கப்பட்டு உள்ளது.

இதனால், குணப்படுத்த முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோயுடன் குழந்தைகள் பிறப்பது தடுக்கப்படுகிறது. இது பொதுவாக தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுகின்றன.

இதனால் உடல் சக்தி இல்லாமல் போகும். இது கடுமையான இயலாமைக்கு வழிவகுக்கும். சில குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள் இறந்துவிடும்.

குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியா, இதயத்தைத் துடிக்க வைக்க உடலுக்குப் போதுமான சக்தியை அளிக்காமல் விட்டுவிடும்

மேலும் மூளை பாதிப்பு, வலிப்பு, குருட்டுத்தன்மை, தசை பலவீனம் மற்றும் உறுப்பு செயலிழப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்தும்.

தற்போது இந்த பரம்பரை நோய்க்கு, மூன்று பேரின் டி.என்.ஏ., விலிருந்து குழந்தை பிறக்கும் தொழில்நுட்பம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.