வைட்டமின் டி சப்ளிமென்ட் யாருக்கு அவசியம்?

உணவில் இருந்து போதுமான அளவு கால்சியம் கிடைக்காமல் குறைபாடு ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனைப்படி 'சப்ளிமென்ட்' மாத்திரைகள் சாப்பிடலாம்.

இதற்கு ரத்த பரிசோதனை செய்து, எந்த அளவு குறைபாடு உள்ளதோ அதற்கேற்ப மாத்திரைகளை பரிந்துரைக்கப்படுகிறது.

பொதுவாக தேவைக்கு அதிகமாக சத்து மாத்திரைகளை சாப்பிடும் போது, இதயம், சிறுநீரக, செரிமானக் கோளாறுகள் போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படும்.

இது போன்றது தான் 'வைட்டமின் டி' சப்ளிமென்டும். இயல்பான அளவு என்ன என்பதற்கு அளவுகோல் நிர்ணயிக்கப்படவில்லை.

வைட்டமின் டி-யின் அளவு 30 என்.ஜி.,/எம்.எல்., என்ற அளவிற்கு குறைவாக இருந்தால், எலும்பு, பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

இந்த அளவிற்கு குறைவாக இருந்தால், மாத்திரைகளை எடுக்க வேண்டிவரும். அதே சமயத்தில், 'மெட்பாலிக் ஹெல்த்' எனப்படும் உடல் உள்செயல்பாடுகளுக்கும் வைட்டமின் டி அவசியம்.