குழந்தைகள் ப்ளூ காய்ச்சலில் இருந்து தப்ப என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக ப்ளூ காய்ச்சலில் இருந்து தப்பிக்க, மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.

வெளியே சென்று வந்தவுடன் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால், ஒரு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படும் போது, மற்றொரு குழந்தையை தனிமைப்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் குழந்தைகள் அருகருகே அமர்வதால், நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட குழந்தையிடம் இருந்து, மற்ற குழந்தைகளுக்கும் பரவுகிறது.

பள்ளிக்கு செல்லும் போது, குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய, அடிக்கடி கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் முடிந்தளவு பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கலாம்.

ஆரஞ்சு பழம், நெல்லிக்காய் போன்ற 'வைட்டமின் சி' உணவுகளை எடுத்து கொண்டால், ப்ளூ வைரசில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

குளிர்ச்சியான காலநிலையின் போது, சூடான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். குளிர்ந்த பொருட்களை தவிர்ப்பது, வைரசிடம் இருந்து நம்மை காக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.