கல்லீரலை காக்கும் உடற்பயிற்சி
உணவு, நீர், காற்றின் வழியே உடலுக்குள் செல்லும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடலை சமநிலையில் வைப்பது கல்லீரலின் பணி.
மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் தற்போது கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்கு உடற்பயிற்சியின்மை, துரித உணவு, மன அழுத்தம் உள்ளிட்டவை முக்கிய காரணமாக உள்ளது.
வாரத்தில் குறைந்தப்பட்சமாக 2.5 மணி முதல் 4 மணி நேரம் உடற்பயிற்சி செய்யும் போது கல்லீரலில் உள்ள கொழுப்பில் (பேட்டி லிவர்) 30 சதவீதத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே, சைக்கிள் ஓட்டுவது, வேகமான நடைபயிற்சி மேற்கொள்வது போன்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
அதேவேளையில், புரோட்டீன் சத்துள்ள உணவுகளையும் தவிர்க்கக்கூடாது.