கை கொடுக்கும் கை.. மூலிகை... வீட்டில் வளர்க்கலாம்!
கை வைத்தியம் செய்ய நீங்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய மூலிகை செடிகள் பற்றி அறிந்து கொள்வோம். தொட்டிகள் இருந்தால் போதும்.
புதினா : ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. வாயு, வயிறு மந்தம், வாய் துர்நாற்றம், செரிமானமின்மை போன்ற பல பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது.
பிரண்டை : பிரண்டை எலும்புகளை பலப்படுத்தவும், வாயுப் பிடிப்பை நீக்கவும், மூலத்துக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.
கற்றாழை : பெண்கள் மாதவிடாய்க் கோளாறுகள், வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கு கற்றாழை நல்லது.
வெந்தயக்கீரை : வயிற்றுவலி, அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக வெந்தயம் பயன்படுகிறது.
குப்பைமேனி : சரும நோய்களை கட்டுப்படுத்த குப்பைமேனி சிறந்த மூலிகை.
சளி பிரச்னை : கற்பூரவல்லி, நொச்சி, தூதுவளை, திருநீற்றுப்பச்சிலை, கண்டங்கத்திரி, தும்பை, துளசி போன்ற மூலிகைகளை வளர்க்கலாம்.
சிறுநீரக பிரச்னை : சிறுநீரகத்தை பாதுகாக்க சிறுபீளை, நெருஞ்சி போன்ற மூலிகைகள் வளர்க்கலாம்.
வாத நோய் : முடக்கறுத்தான், மூக்கிரட்டை கீரை, நொச்சி, கரிசலாங்கண்ணி போன்றவை வாத நோய்களை போக்க கூடியவை.