மாணவர்களிடம் அதிகரிக்கும் நீரிழிவு பாதிப்பு... ஆய்வில் அதிர்ச்சி தகவல் !
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லுாரி சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியம் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், 400 மாணவர்கள் உட்படுத்தப்பட்டதில், 16 சதவீதத்தினருக்கு பெரியவர்களுக்கு வரக்கூடிய டைப் 2 நீரிழிவு பாதிப்பு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
கிராமப்புறங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நகர்புறங்களில் பீசா, பர்கர் எனும் துரித உணவு கலாசாரத்தை அதிகம் கொண்டுள்ள மாணவர்கள் மத்தியில் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.
இதுதவிர, 10-15 வயதுள்ள 100 மாணவர்களில், 6-7 பேர் துாக்கமின்மை பிரச்னைக்காக மருந்து உட்கொள்வதும் தெரியவந்துள்ளது.
மொபைல் போன் பயன்பாடு, துாக்கமின்மை பிரச்னைக்கு காரணமாக உள்ளது. இரவு துாங்கும் நேரம் மாறுவதால், மொத்த ஆரோக்கிய 'சிஸ்டமும்' மாறிவிடுகிறது.
இன்றைய குழந்தைகளின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமெனில் பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது.
அனைத்து வகை பள்ளிகளிலும், தினமும் ஒரு மணி நேரம் கட்டாயம் விளையாட்டு வகுப்பு வைக்க வேண்டும்.
சாக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து துரித உணவுகளை தவிர்க்க, குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.