குழந்தைகளும் கண்களும்... பராமரிக்க சில டிப்ஸ்!

குழந்தைகள், சிறுவர்கள் அலைபேசியை மிகவும் அருகில் வைத்து பார்ப்பதால், அந்த பார்வைக்கு ஏற்றவாறு கண் நரம்புகள், திசுக்கள் மாறிக்கொள்கின்றன.

ஆரம்பத்தில் சிறிய பார்வை குறைபாடு இருக்கும் போது கண்டுபிடித்தால் கண்ணிற்கான பயிற்சிகள் மூலம் நிவர்த்தி செய்து விடலாம்.

ஆனால் முதலில் கவனிக்காமல் தொடரும் போது, ஆண்டுகள் செல்ல செல்ல பார்வை குறைபாடு அதிகரித்துக்கொண்டே செல்லும். கண் விழித்திரையை கூட பாதிக்கும் நிலையை ஏற்படுத்தும்.

அந்த நேரத்தில் விழித்திரைக்கு கூடுதல் ஆக்ஸிஜன் கிடைக்கும் வகையில், கண் நரம்புகளுக்கு நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும் சிகிச்சைகள் அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மூன்று வயதானாலே கண்ணை ஆண்டிற்கொரு முறை பரிசோதிப்பது நல்லது. ஏனெனில் அவர்கள் கண்ணில் பிரச்னை இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே சிரமம்.

அவர்கள் புத்தகத்தை மிக அருகில் வைத்து படித்துக்கொண்டிருந்தால் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

அவர்கள் உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள் தினமும் இடம்பெறுவது அவசியம். சுத்தமான நெய் சேர்த்த உணவு சாப்பிடுவது நல்லது.

பச்சை பசேல் வயல்வெளிகள், தோட்டங்கள் என இயற்கையான பச்சை நிறத்தை பார்ப்பது கண்ணிற்கு இதமளிக்கும்.