வெரிகோஸ் வெயின் நோயை இப்போது குணப்படுத்த முடியும்
நீண்ட நேரம் நின்றும், அமர்ந்தும் பணிபுரிபவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் மத்தியில் வெரிகோஸ் வெயின் என்னும் நரம்பு சுருட்டு பாதிப்பு ஏற்படுகிறது.
காலின் நரம்புகள் புடைத்து காணப்படுவது முக்கிய அறிகுறி. தவிர, காலில் அரிப்பு, வீக்கம், தோலின் நிறம் மாறுதல், காலில் புண், ரத்த கசிவு, ஆறாத புண் போன்றவை பொதுவான அறிகுறி.
அதிக நேரம் நின்றபடி வேலை செய்வதை தவிர்ப்பதும், உடல் எடையை சரியான அளவில் வைப்பதும், உடற்பயிற்சி செய்வதும், ஊட்டச்சத்து உணவு எடுத்துக்கொள்வதும் அவசியம்.
இப்பாதிப்பு பரம்பரையாக வரும் என்பதால், குடும்பத்தில் யாருக்காவது இருந்தால், குறிப்பிட்ட கால இடைவெளியில் தாமாக முன்வந்து பரிசோதனை செய்வது நல்லது.
பாதிப்பு எதுவாக இருந்தாலும், ஆரம்ப நிலையில் சிகிச்சைக்கு செல்வது அவசியம். பெரும்பாலும், இந்நோய் முற்றி ரத்தக்கசிவு, புண் ஏற்பட்ட பின்னரே சிகிச்சைக்கு வருகின்றனர்.
ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், பின்விளைவுகளை முழுமையாக தவிர்க்கலாம். டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் எனும் பரிசோதனை வாயிலாக, துல்லியமாக கண்டறிந்து விடலாம்.
தற்காலிகமாக காலுறை அணிவது, பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க உதவும். ஆப்ரேஷன் மட்டுமே தீர்வாக இருந்தநிலையில், தற்போது, நுண்துளை சிகிச்சையில் முழுமையாக குணப்படுத்தலாம்.