ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொத்தமல்லி

கொத்தமல்லியின் விதை, இலை இரண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்பு என, நான்கு விதமான சுவைகளை உள்ளடக்கியது.

இதில், சுண்ணாம்பு, இரும்பு உட்பட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன.

உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து, ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுப்பதால், ஹார்ட் அட்டாக் ஆபத்தை குறைக்கிறது.

கண்பார்வைவை மேம்படுத்தும் என்பதால், சிறுவயதிலிருந்தே இந்த கீரையை, குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.

இதிலுள்ள எத்தனாலிக் சாறு, நீரிழிவு குறைப்பாட்டை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் பீட்டா செல்களின் செயல்பாடு அதிகரிக்கிறது.

தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், செரிமானத்தை ஊக்குவிக்கும்.

இது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுவதுடன், உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. கூந்தலை வலுப்படுத்துவதுடன், இளம் நரையைத் தாமதப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து, சாப்பிட்டு வர குழந்தை ஆரோக்கியமாக வளரும்; எலும்புகள், பற்கள் உறுதியடையும்.

நான்கு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வர உடல் சூடு தணியும்; களைப்பு நீங்கும்.

எனவே, அடிக்கடி உணவில் கொத்தமல்லி இலையை துவையல், தொக்கு, ரசம், ஜூஸ் மற்றும் கொத்தமல்லி சாதம் என ஏதாவது ஒரு வகையில் உட்கொள்ளலாம்.