சிறுநீரக செயலிழப்பு... தவிர்க்கும் வழிமுறைகள் என்னென்ன?
சிறுநீரின் அளவு குறைந்துபோதல் அல்லது சிறுநீர் வெளியேறாமல் இருப்பது...
தொடர் காய்ச்சல், நீங்காத தலைவலி, காலில் வீக்கம், மூச்சுவிட சிரமம், சோர்வு, தோல் நிறத்தில் மாற்றம், பின் குதிகாலில் வலி உட்பட பல சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளாகும்.
எனவே, சிறுநீரக செயலிழப்பின் பாதிப்பை தவிர்க்கும் வழிமுறைகள் இதோ...
தினமும் விரைவில் உறங்க சென்று, அதிகாலையில் எழ வேண்டும். அதாவது போதிய உறக்கம் இருக்க வேண்டும்.
தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும்.
உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். முடிந்தளவு வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ள வேண்டும். குறைவான அளவு உட்கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும்.
எனர்ஜி மற்றும் சாப்ட் டிரிங்ஸ்கள் ஆகியவை மிகவும் ஆபத்தானவை. குழந்தைகள் அவற்றை உட்கொள்வதையும் முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.