குழந்தைகளை தாக்கும் 'வாக்கிங் நிமோனியா' அதிகரிப்பு!
குழந்தைகளை தாக்கும் 'வாக்கிங் நிமோனியா' பாதிப்பு அதிகரித்து வருவதால், பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
காலநிலை மாற்றம் காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மார்பு சளியால் ஏற்படும், 'வாக்கிங் நிமோனியா' என்ற பாதிப்பு தற்போது அதிகரித்து உள்ளது.
குழந்தைகளுக்கு சுவாச தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது, காய்ச்சல், இருமல் அதிகம் ஏற்படுகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
மைக்கோபிளாஸ்மா எனும் வாக்கிங் நிமோனியா நோய்த் தொற்று உள்ளதா என்பதை அடையாளம் காண ரத்த பரிசோதனை அவசியம். தாமதமாக சிகிச்சை எடுத்தால், தொற்று பாதிப்பு அதிகமாகும்.
ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 2 மாதங்களாக 'வாக்கிங் நிமோனியா' பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
ஒரு குழந்தைக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல், சளி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை இருந்தால் இந்நோய்த்தொற்றுயின் அறிகுறி என கருதி உடனடியாக டாக்டரை பார்க்கவும்.