பைபாஸ் ஆபரேஷனுக்கு பின்னரும் ரத்தக்குழாய் அடைப்பு வருமா?
உலகளவில் அதிக இறப்புகளில், ஹார்ட் அட்டாக் முதல் இடத்திலுள்ளது. இன்றைய வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம்.
உடல் இயக்கமின்மை, உடல் பருமன், அதிக எண்ணெய், ஜங்க் உணவு, மன அழுத்தம், துாக்கமின்மை, புகை மற்றும் மது பழக்கம் காரணமாக இதயம் பாதிக்கப்படுகிறது.
பைபாஸ் ஆபரேஷன் செய்த இடத்திலும், வேறு புதிய இடத்திலும் எப்போது வேண்டுமானாலும் அடைப்பு ஏற்படலாம்.
ரத்தக்குழாய் அடைப்புகளின் தன்மையைப் பொறுத்து முடிவுகள் மாறுபடும்.
ஒரு அடைப்பு உள்ளவருக்கும் சில நேரங்களில் பைபாஸ் ஆபரேஷன் சிகிச்சை தேவைப்படக்கூடும்.
அதேவேளையில், பல அடைப்புகள் இருந்தாலும், நான்கைந்து 'ஸ்டென்ட்' பொருத்தியும் சரி செய்யும் வாய்ப்புகள் உண்டு.
குடும்ப டாக்டரிடம் அவ்வப்போது வழிகாட்டுதல் பெறுவது அவசியமானது.