பருவ கால மாற்றத்தால் வரும் காய்ச்சலில் இருந்து எப்படி பாதுகாப்பது?
பருவகால மாற்றத்தால் பொதுவாக வைரஸ் காய்ச்சல் பரவத் தொடங்கும்.
இந்த காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனா காலத்தில் கடைப்பிடித்த தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
தண்ணீரை சுட வைத்து குடிக்க வேண்டும். குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
கையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவவும்.
வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.
நுரையீரல் தொற்று, சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
டாக்டர் ஆலோசனை இல்லாமல் மாத்திரையை வெளியே வாங்கி உண்ணக்கூடாது.
காய்ச்சல் வருவதை உணர்ந்தால் உடனடியாக டாக்டரை அணுகி உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.