கடும் குளிர்காலத்தை சமாளிப்பது எப்படி?

தற்போது குளிரும் அதிக அளவில் இருக்கிறது. இது போன்ற சமயங்களில், நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பருவத்தில், செரிமான மண்டலத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை கணிப்பது சிரமம். சில நேரங்களில் ஆரோக்கியமாக இருக்கும்; சில நேரங்களில் பிரச்னைகள் வரும்.

நன்றாக பசிக்கிற நேரத்திலும், வழக்கமாக சாப்பிடும் அளவை விடவும், குறைந்த அளவு உணவையே சாப்பிட வேண்டும்.

இரண்டாவது விஷயம், ஒவ்வாமை பிரச்னைகள், மூட்டுகளில் வலி, குளிர் காலத்தில் அதிகம் ஏற்படும்.

இவற்றை தவிர்க்க, வாதத்தை அதிகரிக்கும் வாழைப்பழம், நிலக்கடலை மற்றும் உருளைக் கிழங்கு போன்ற பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குளிர் காலத்தில் சமைக்கும் எல்லா உணவுகளிலும், மிளகு சேர்த்து சமைப்பது அவசியம்.

புளித்த மோர், தயிர் மற்றும் புளி ஆகியவற்றை கொஞ்சமாக எடுக்கலாம்.

எல்லா நேரத்திலும் வெதுவெதுப்பான நீரையே குடிக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர், செரிமானத்திற்கும், உடம்பில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.