இமைகளின் ஓரத்தில் பாக்டீரியா தொற்று மற்றும் அழுக்குகள் சேர்வதால், கண் ஓரத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட்டு கண் கட்டி உருவாகிறது.
கண்களிலிருந்து அதிகம் நீர் வடிதல், கண்கள் சிவந்து போதல்,இமைகளின் ஓரத்தில் பரு போன்று கட்டி உருவாகுதல் போன்றவை அறிகுறிகளாகும்.
கண்களைத் தொட ஆசையாக இருந்தாலும், சுத்தமில்லாத கைகளைக் கொண்டு தொடுவதால் தொற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
கண்கட்டி இருக்கும் போது காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தொற்று சரியாகும் வரை கண்களுக்கு மேக்கப்பை தவிர்க்கலாம்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரியான சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் குணப்படுத்தலாம்.