யூரிக் அமில அளவை குறைக்க உதவும் 5 உலர் பழங்கள்
உடலிலுள்ள யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டியது அவசியமாகும். இயற்கையாகவே உடலில் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் 5 உலர் பழங்கள் இதோ...
வால்நட்... இதிலுள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இதிலுள்ள பியூரின்கள் குறைவாக இருப்பதால், யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
முந்திரிப்பருப்பு...இதிலுள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலின் ஒட்டுமொத்த கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுவதால், யூரிக் அமில அளவைக் கட்டுக்குள் வைக்கலாம்.
பேரீச்சம்பழத்திலுள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவை சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. யூரிக் அமிலத்தை அகற்ற சிறுநீரக செயல்பாடு அவசியமானது.
நார்ச்சத்தின் சிறந்த மூலமாக உள்ள பாதாம், செரிமானத்தை மேம்படுத்துகிறது; சிறுநீரகங்கள் மூலம் அதிகப்படியான யூரிக் அமிலத்தை அகற்றவும் உதவுகிறது.
பிஸ்தாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை கட்டுப்படுத்துகிறது; இது அதிக யூரிக் அமில அளவுகளுடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.