ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதன் அறிகுறிகளும்.
இந்த நோய் எப்பொழுதும் மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது.
இந்த நோயின் அறிகுறிகள் குழந்தை பிறந்த முதல் 12 மாதத்திலேயே தெரியும்.
பிறவியிலேயே ஏற்படும் இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளால், அனைத்து மக்களிடமும் சகஜமாக பழக இயலாது.
இந்நோய் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிறிய சிதைவால் ஏற்படுகிறது.
இது ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக பெற்றோர்களின் வயது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் பருமன், வைரஸ் தொற்று ஆகியவை அமைகிறது.
பெரும்பாலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 35% பேருக்கு வலிப்பு நோயின் பாதிப்பு உள்ளது.
50 முதல் 80 சதவீத குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது.
ஆரம்பகாலத்திலேயே பிஹேவியரல், ஸ்பீச் தெரபி போன்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டால் பாதிப்பின் அளவை வெகுவாக குறைக்கும்.