தேங்காய் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிக்குமா?

ரத்தத்திலுள்ள கொழுப்புகளில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவற்றில், ஹெச்.டி.எல்., என்பது நல்ல கொழுப்பு; எல்.டி.எல்., - டி.ஜி.எல்., ஆகிய இரண்டும் கெட்ட கொழுப்புகள்.

இதய நோய் அபாயத்தை அத்தெரோஜெனிக் திறன் மூலம் அளவிட முடியும். உடலில் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பே, முறையற்ற கொழுப்பு அதிகரிக்க காரணம்.

கொழுப்பின் அளவை, குறிப்பிட்ட அளவிற்கு குறைப்பதன் மூலம், இதய ரத்தக் குழாயில் அடைப்பு உட்பட கோளாறுகள் ஏற்படுவதை, 20 % அடுத்த ஐந்தாண்டுகளில் குறைக்க முடியும்.

'டிரான்ஸ்' கொழுப்புகள் எனப்படும் நிறைவுறாத கொழுப்புகள், அதிக அளவில் இதய நோயை ஏற்படுத்துகின்றன.

நிறைவுற்ற கொழுப்புகளும் தினசரி உணவில், 5 %க்கு மேல் இருக்கக்கூடாது. 'மோனோ, பாலி அன்சாச்சுரேடெட்' கொழுப்புகள், அதாவது கரையும் கொழுப்புகள், பொதுவாக கொழுப்பு அளவை பாதிக்காது.

தேங்காய் சாப்பிடுவதால் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது என்பது தவறான கருத்து. தேங்காயில் அதிகமாக உள்ள கொழுப்பு அமிலங்கள், கொழுப்பு அளவை பாதிக்காது.

எனவே, உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பின் தன்மையை புரிந்து கொள்வதும், அதன் சரியான பயன்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம், இதய ரத்தக்குழாய் பாதிப்புகளை குறைக்கலாம்.