குழந்தைகளுக்கு சொறி சிரங்கை எப்படி சரிசெய்வது?
பொதுவாக தோல் நோயான சிரங்கு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடிய ஒரு வகையான தொற்று.
நோயுள்ளவர்களை தொடுவதாலும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதாலும் வருகிறது.
பெரியவர்களை விட குழந்தைகளுக்குதான் இது எளிதில் பரவி தொற்று உண்டாகும்.
விரல்கள் இடையிலும், மார்பிலும், தொப்புள் பகுதியிலும், பிறப்புறுப்பிலும் அரிப்பு ஏற்பட்டு புண் உண்டாகும்.
அரிப்பு வந்தால் தோல் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரை, களிம்புகளை உபயோகித்தால் நோய் முற்றி பக்க விளைவு வரும்.
அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒருவரின் சோப்பு, துண்டு, ஆடைகளை குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
வெளியே சென்று வீடு திரும்பியவுடன் குளிக்க வேண்டும்.