விபத்திற்கு பின் தலைச்சுற்று, வாந்தி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

விபத்துக்கள் ஏற்படும் போது தலையில் காயம் ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

விபத்து நடந்த போது நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அசட்டையாக இருந்து விடக்கூடாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

தலையில் விபத்தின் போது ஏற்பட்ட பாதிப்பு ஒவ்வொன்றாக தெரியவரும். அப்போது டாக்டர்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இதனை விடுத்து சுயமாக முடிவு செய்து தாங்களே பரிசோதனைகளை செய்து சிகிச்சை பெறக்கூடாது. அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

சிலருக்கு விபத்து ஏற்பட்டு பிறகு வாந்தி, மயக்கம், தலைச் சுற்று, காதில் ரத்தம் வடிதல் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

அப்படி இருந்தால் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.