பற்களை எடுக்காமல் பற்சொத்தைக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் அறிவோமா!!

பல் வலியால் அவதிப்படுபவரில் பாதிக்கும் மேற்பட்டோர் பல் பிரச்னை இருந்தும் பல் டாக்டரிடம் செல்வதில்லை. அதுவே நாளடைவில் வலியாகவோ வீக்கமாகவோ மாறி விடும்.

பல் எடுக்க வேண்டியிருக்குமோ என்ற பயமே பல் மருத்துவமனைக்கு செல்லாமல் இருப்பதற்கான முதல் காரணம்.

பல் சொத்தையினால் வலி வந்தால் பல் எடுக்க வேண்டும் என்பதில்லை. பல் எடுக்காமல் செய்யக்கூடிய பல சிகிச்சை வழிமுறைகள் தற்போது உள்ளன.

சொத்தையின் அளவைப்பொறுத்து பல் அடைப்பது அல்லது வேர் சிகிச்சை செய்து பற்களை சரிசெய்து அதன் மேல் 'செராமிக் கேப்' போட்டு விட்டால் இயற்கை பற்கள் போலவே மாறி விடும்.

முன்பு வேர் சிகிச்சை செய்ய முடியாது என்று சொல்லப்பட்ட பல பற்களுக்கு இன்றைய நவீன சாதனங்களால் எளிதாக மற்றும் வலியின்றி வேர் சிகிச்சை செய்ய முடியும்.

சொத்தையினாலோ அல்லது அடிபட்டோ பற்கள் உடைந்தால் கூட வேர் சிகிச்சை செய்து பற்களை கட்ட முடியும்.

ஈறுகளை பலப்படுத்தி அதன் மூலம் பற்கள் ஆடாமல் இருக்க செய்வது, வலுவான பற்களோடு ஆடும் பற்களை இணைத்து அவற்றை பலம் பெறச்செய்வது போன்ற வழிமுறைகளால் ஆடும் பற்களை எளிதாக சரிசெய்யலாம்.