ஆகஸ்ட் 1-7 தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்!
'உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆக., 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. .
தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்: நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குங்கள் என்பது இந்தாண்டு மையக்கருத்து.
தாய்மை ஒரு வரம் என்றால், தாய்ப்பால் கொடுப்பது வரப்பிரசாதம். பிறந்த குழந்தை அழுகையை நிறுத்திய அடுத்த சில நிமிடங்களில், தேடுவது அன்னையின் தாய்ப்பாலைத்தான்.
ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை வழங்கலாம்.
தாய்ப்பால் வழங்குவதன் மூலம், ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது, குழந்தைக்கு மட்டுமல்லாமல்; தாயின் உடல்நலனுக்கும் சிறந்தது.
குறிப்பாக தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், தாய்க்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கலாம்.