உணவை அவசரமாக உண்பவரா நீங்க...!
இன்றைய பரபரப்பான நாகரிக உலகில் உணவை சரிவர சாப்பிடக்கூட பலருக்கும் போதிய நேரம் இருப்பதில்லை.
உணவை அவசர அவசரமாக உண்பது செரிமானமின்மை உட்பட பல வயிற்று பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது.
உணவை சரியாக மென்று சாப்பிடாமல் அவசரமாக உண்பதால் வாயிலுள்ள சுரப்பிகள் சுரந்து செரிமானத்திற்கு உதவ முடிவதில்லை.
5 முதல் 8 நிமிடங்களில் சாப்பிடுவதற்கு பதிலாக, 13 நிமிடங்கள் வரை சாப்பிட்டு பழகுங்கள்.
உண்மையில் செரிமானம் வாயில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. நொறுங்கத் தின்றால் நுாறு வயது வாழலாம்.
மூன்று நேரமும் நார்ச்சத்துள்ள, நீர்ச்சத்துள்ள உணவு, காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ள பழகுங்கள். தனியாக ஒருவேளையாக சாப்பிட வேண்டியதில்லை.
அதேப்போல், தினமும் வெவ்வேறு நேரங்களில் காலை, மதியம், இரவு உணவு சாப்பிட்டால் செரிமான பிரச்னை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.