தோள்பட்டையில் வலி வருவது ஏன்?

வயது, காயம் மற்றும் மரபியல் உள்ளிட்ட பல காரணிகளால் தோள்பட்டை வலி வரலாம்.

பொதுவாக அதிகப்படியான பயன்பாட்டினால் தசைநாண்கள் வீங்கிய நிலை, எலும்பு மூட்டு, கழுத்து அல்லது தோள்பட்டை நரம்பு சுருக்கம், தோள்பட்டை அல்லது கை எலும்பு முறிவு போன்ற காரணங்களாலும் வரலாம்.

மாரடைப்பின் அறிகுறி இருந்தாலும் தோள்பட்டை வலி வரலாம்.

சுவாசிப்பதில் சிரமம் அல்லது மார்பில் அழுத்தம் போன்ற உணர்வுடன் தோள்பட்டை வலி இருந்தால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.

இவ்வாறு உணர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

இல்லை வேறு பிரச்னை என்றால் அதற்கு ஏற்றாற் போல் சிகிச்சை பெறவேண்டும்.

தோள்பட்டையில் உள்ள திசுக்களில் பிரச்னை என்றால் அறுவை சிகிச்சையின் மூலமும் சரிசெய்யலாம்.