அதிகரிக்கும் மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு... காரணமென்ன?
தமிழகத்தில் பிற புற்றுநோய் பாதிப்புகளை விட மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை பிற புற்றுநோய்
பாதிப்புகள் 8 - 9 % அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், மலக்குடல்,
பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 17 %
அதிகரித்துள்ளது.
10 ஆண்டுகளில் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும். துவக்கநிலை முதல் 3வது நிலை வரை கண்டறிந்தால், 100 % குணப்படுத்த முடியும்.
மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
உணவு பழக்கமே இதற்கு முக்கிய காரணம். முன்பு, நார்சத்து அதிகமுள்ள சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொண்டோம்.
காய்கறி,
பழங்கள், கீரைகள், சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது கழிவுகள்
மலக்குடல், பெருங்குடலில் நீண்ட நேரம் தங்குவது இல்லை.
தற்போது அரிசி, மைதா, துரித மற்றும் அதிக இனிப்புள்ள உணவுகளை உட்கொள்கிறோம். ஆனால், இதன் கழிவுகள் இரண்டு, மூன்று நாட்கள் தங்கி மெதுவாக வெளியேறுவதே முக்கிய காரணமாகும்.
பசியின்மை, மலச்சிக்கல், எடை குறைதல், அஜீரணக்கோளாறுகள், மலத்தில் ரத்தம், மாறுபட்ட மல பழக்கம் இதற்கு முக்கிய அறிகுறியாக உள்ளது.
2 வாரத்திற்கு மேல் மாறுபட்ட மல பழக்கம் இருந்தால் உடனடியாக
இப்பாதிப்புக்கான கொலனோஸ்கோபி ஸ்கிரீனிங் செய்து கொண்டாலே முன்கூட்டியே
அறிந்துகொள்ள முடியும்.