மூளையை சுறுசுறுப்பாக்கும் பாதாம்

பாதாமில் தாதுக்கள், புரதம், அமினோ அமிலம், வைட்டமின் பி, மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு உட்பட பல்வேறு ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன.

ஆசியர்கள், எகிப்தியர்களின் உணவில் பிரபலமாக இருக்கும் பாதாமில், சரும் ஆரோக்கியத்திற்கு பிரதானமான வைட்டமின் கே உள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட், தோல் மூப்பு அடைவதை வெகுவாகக் குறைக்கிறது.

பாதாமில் உள்ள அமினோ அமிலம், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

வைட்டமின் பி, மெட்டபாலிசம் எனப்படும் உடல் உள்செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

பசி உணர்வைக் குறைப்பதால், அதிக கலோரி சாப்பிடும் அபாயம் இல்லை.

காலை எழுந்தவுடன் முதல் உணவாக நான்கு பாதாம் சாப்பிடுவதால், நாள் முழுதும் மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது.

இரவு முழுதும் நீரில் ஊற வைத்து, காலையில் தோல் நீக்கி சாப்பிட வேண்டும்.

தினமும் நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவதால், எட்டு முதல் 12 சதவீதம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைகிறது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.