மழைக்காலத்தில் சருமத்தை காப்பது எப்படி?

குளிர் காலத்தில் சருமம் வறண்டு விறுவிறுவென இழுக்கும், உடம்பில் வெள்ளை வெள்ளையாக செதில்கள் காணப்படுவது போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

மழைக்காலத்தின் இப்படியான சில பிரச்னைகளிலிருந்து விடுபட நமது சருமத்திற்கு சிறப்பு கவனம் தேவை.

சென்சிடிட்டிவ் ஸ்கின்' கொண்டவர்களுக்கு பாதிப்புக்கான வாய்ப்புகள் சற்று அதிகம்.

எண்ணெய் தன்மை இல்லாத இயற்கை சோப் மற்றும் முகம் கழுவும் கிரீமை உபயோகிக்கலாம்.

முகம் கழுவிய பிறகு உங்கள் சருமத்தில் மாய்ஸ்சரைசரைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக பூஞ்சை தொற்று வரலாம். அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அவசியம்

மழைக்காலத்தில் கிடைக்கும் சீசன் பழங்களை சாப்பிடுவது சருமத்திற்கு நன்மை பயக்கும்

சரும வறட்சியை போக்க பாலாடை, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை தடவி முகம் கழுவலாம்.

மழைக்காலத்தில் சோப்புக்கு பதிலாக கடலை மாவைப் பயன்படுத்தலாம். ஏனெனில் சோப்பில் உள்ள கெமிக்கல் சருமத்தை மேலும் வறண்டு போக செய்யலாம்.