இன்று உலக கழிப்பறை தினம்

உலக கழிப்பறை தினம், ஆண்டுதோறும் நவ., 19ல் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகில் 350 கோடி பேருக்கு பாதுகாப்பான, சுகாதாரமான கழிப்பறை வசதி கிடைக்கவில்லை. இதில் 40 கோடி பேர் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர்.

கழிவறை மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த 2001ல், சிங்கப்பூரில் பரோபகாரர் ஜாக் சிம் நிறுவிய தன்னார்வ தொண்டு நிறுவனமான உலக கழிப்பறை அமைப்பு நவ. 19 அன்று உலக கழிப்பறை தினமாக அறிவித்தது

2010ல் ஐக்கிய நாடுகள் சபை நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மனித உரிமையின் அடிப்படை என்பதை வலியுறுத்தியதால் உலகளவில் இத்தினம் மிகவும் முக்கியம் பெற்றது.

உலக கழிப்பறை தினத்தன்று, உலகம் முழுவதும் கழிப்பறை மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது.

மலேரியா, வயிற்றுப்போக்கு, நோய்க்கிருமிகளின் தாக்கத்தால் ஏற்படும் காய்ச்சல் போன்ற பலவித நோய்களுக்கு, திறந்தவெளி கழிப்பிடங்கள் தான் காரணம்.

கழிப்பறை தொடர்பான தொற்றுகளை கட்டுப்படுத்த திறந்த வெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதை தவிர்த்து, கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்