அடிக்கடி வரும் கால் வீக்கத்திற்கு காரணமும் தீர்வுகளும்!!
சேரில் நீண்ட நேரம் உட்காரும் போதும், பஸ்சில் பயணம் செய்யும் போதும் கால் வீங்கி விடும்.
பொதுவாக நரம்பு பிரச்னை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உப்புச்சத்து உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்னை இருக்கும்.
கம்ப்யூட்டரில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கும், நீண்ட நேரம் நிற்கும் பஸ் கண்டக்டர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கால் வீக்கம் வரலாம்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் போது சற்று ஓய்வெடுக்கும் வகையில் சிறிது நடக்க வேண்டும்.
அந்த நேரத்தில் தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரத்துக்கு பின் மீண்டும் பணியை துவக்கலாம்.
நரம்பு பிரச்னையால் கால் வீக்கம் ஏற்படும் போது இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்புள்ளது.
கால் அடிக்கடி இதுபோன்று வீங்கும்போது மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற்றும், மருத்துவ பரிசோதனை செய்தும் தீர்வு காண வேண்டும்.