தாய்ப்பால் கொடுக்கும் முறையில் கவனம் அவசியம்!
தாய்ப்பாலுாட்டலில் ஆரம்பத்தில் சிரமம் ஏற்படலாம். குறிப்பாக சிலருக்கு முதல் சில நாட்களுக்கு பால் வராதது.
அதனால் குழந்தை சரியாக பால் குடிக்காமல் இருத்தல் போன்றவற்றை சமாளிப்பது குறித்து, முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பது அவசியம்.
குழந்தையின் முகம் தாயின் மார்பகத்தை நோக்கி இருக்க வேண்டும். இவை, குழந்தைக்கு பால் பாய்ச்சல் அதிகமாக உறிஞ்ச உதவும்.
அப்போது, தாயின் முதுகு, கழுத்து நேராக இருக்க வேண்டும். தேவைபட்டால், தலையணை பயன்படுத்தி தாய்ப்பால் கொடுக்கலாம்.
சரியான முறையில் பிடிப்பு இல்லாமல் தாய்ப்பால் கொடுப்பதால், பால் வராது. மார்பகத்தில் வலி ஏற்படும். இவற்றால், மார்பு காம்பில், புண், பிளவு பாதிப்பு ஏற்படும்.
குழந்தை வாயை முழுதும் திறந்து, நன்கு உறிஞ்சும்போது, தாயின் மார்பகத்தில் பால் சுரப்பு அதிகரிக்கும்.
மார்பகத்தை சுத்தமாகவும், வறட்சியில்லாமல் வைத்தல் முக்கியம்.
பால் ஊட்டலில் சிரமங்கள், மார்பகத்தில் வலி போன்றவை இருந்தால், டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம்.