கண்ணை சுற்றி கருவளையம்.. காரணமும் தீர்வுகளும்!
பொதுவாக சரியான துாக்கமின்மை, நீண்ட நேரம் அலைபேசி, கம்ப்யூட்டர் பார்ப்பது, போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் கண்ணை சுற்றி கருவளையம் வரும்.
உடலில் உஷ்ணம் அதிகமாக இருந்தாலும் கண்களை சுற்றி கருவளையம் வருகிறது.
தற்போது'ஏசி'யில் பணிபுரிவதால் தாகம் எடுப்பது இல்லை. குடிநீரை போதுமான அளவு குடிப்பது இல்லை.
இதுபோன்ற காரணங்களால் கண்ணை சுற்றி கருவளையம், இரவில் துாங்கி விழிக்கும் போது கண்ணில் எரிச்சல் ஏற்படும்.
இதனை தவிர்க்க கம்ப்யூட்டர், அலைபேசியில் பணிபுரியும் போது அரை மணி நேரம், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளியில் கண்ணிற்கு ஓய்வு அளிக்க வேண்டும்.
தேனில் திருநீறைக் குழைத்து, கருவளையத்தின் மீது தடவி, 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.
ஊற வைத்த பாதாமை பாலுடன் சேர்த்து மை போல அரைத்து, கண்களைச் சுற்றிலும் பேக் போடலாம்.
தோல் நீக்கிய தக்காளி விழுது, விதை நீக்கிய கறுப்பு திராட்சை விழுது இவற்றை கண்களின் மீது பூசலாம். இவற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.