முதியவர்களை பாதிக்கும் எலும்பு புரை நோய்?

வயது முதிர்வு அடையும் பட்சத்தில் எலும்பின் தன்மையில் எலும்பு புரை எனும் நோய் ஏற்படும்.

இதனால் எலும்பின் அடர்த்தி குறைய வாய்ப்பு உண்டு. மேலும் முதுகுதண்டுவட எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புகளும் அதிகம்.

தொடர்ச்சியான வலி மற்றும் முதுகு தண்டுவட கூன் விழுதல் ஏற்படும். எலும்புகள் அதன் அடர்த்திகளை இழப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது.

இது பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்குதான் அதிகமாக ஏற்படும்.

கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு மற்றும் பிற நோய்களின் தாக்காத்தால் கூட இது ஏற்படும்.

அவர்களுக்கு டாக்டரின் ஆலோசனை படி ஹார்மோன் சிகிச்சை அளிக்கவேண்டும். இதனால் எலும்பு மேலும் சேதம் அடைவதையும் எலும்பு முறிவுகளுக்கான ஆபத்துக்களையும் குறைக்கலாம்.

மேலும் ஊட்டச்சத்தான உணவுகளை வழங்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.