சர்க்கரை விஷயத்தில் வாழைப்பழம், சாக்லேட்... எப்படி என பார்க்கலாம்?
2 சாதாரண வாழைப்பழத்தில் சராசரியாக 30 கிராம் சர்க்கரை இருக்கக்கூடும். அதேப்போல் மீடியம் சைஸ் சாக்லேட் பாரிலும் இதே அளவு சர்க்கரை உள்ளது.
இதில் வாழைப்பழம் ஆரோக்கியமானது என்றும், சாக்லேட் ஆரோக்கியமற்றது எனவும் கூறப்படுவதன் காரணம் பலருக்கும் சரிவர புரிவதில்லை.
சாக்லேட் சாப்பிடும் போது அதிலுள்ள சர்க்கரை விரைவில் ரத்த அணுக்களில் கரைந்து இன்சுலினை அதிகரிக்கும். கொழுப்பு அதிகரிப்பதுடன், மேலும் மேலும் சாப்பிடும் உணர்ச்சி தூண்டப்படும்.
அதேவேளையில் வாழைப்பழத்திலுள்ள நார்ச்சத்து சர்க்கரையை மெதுவாகத்தான் கரைய விடக்கூடும்.
இதனால், இன்சுலின் அளவு உடனடியாக அதிகரிக்காது; எடையும் கட்டுக்குள் இருக்கும்.
மேலும், வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம், வைட்டமின்கள், தாதுக்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடும்.