வித்தியாசமான தலைச்சுற்றலா வெர்டிகோவாக இருக்காலம்….
வெர்டிகோ என்பது ஒரு வகையான தலைச்சுற்றல். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு குமட்டல், வாந்தி, சமநிலையில் சிரமம், நடப்பதில் சிரமம் போன்றவையும் உடன் இருக்கும்.
உள் காதில் ஏற்படும் பிரச்னைகளால் காரணமாக வெர்டிகோ ஏற்படுகிறது. குறிப்பாக சமநிலையை பராமரிப்பதில் ஈடுபட்டுள்ள காது மற்றும் மூளையின் பாகங்களின் கோளாறுகளால் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்னைக்கு மருந்து, மாத்திரைகள் பெரிதாக கிடையாது. இதற்காகவே எக்சர்சைஸ் உள்ளது அதை செய்ய வேண்டும்.
வெர்டிகோ அறிகுறிகளுக்கு மருத்துரை அணுகி உரிய சிகிச்சை பெறலாம். பிசிக்கல் ட்ரீட்மென்ட் மூலம் பேலன்ஸ் பிரச்னையை மேம்படுத்தலாம்.
பாதிப்பு ஏற்பட்டவர்கள் தலையை அசைக்கும் போது மெதுவாக, கவனமாக அசைக்கவும். படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது பொறுமையாக, மெதுவாக எழலாம்.
இரவு நேரங்களில் 6 - 8 மணி நேரம் சீரான தூக்கம் அவசியம். தலையணைகளை பயன்படுத்தி உங்கள் தலையை சற்று உயர்த்தி வைத்து கொள்ளலாம்.
வெர்டிகோவால் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியைக் கட்டுப்படுத்த தேன் கலந்த இஞ்சி டீயைத் தினசரி குடிக்கலாம்.
யோகா செய்வதன் மூலம் வெர்டிகோ தலைச்சுற்றலைச் சரிசெய்யலாம். பிரிட்ஜ் போஸ், ஸ்வஸ்திகாசனா, சுப்த பாதாங்குஸ்தாசனா போன்ற யோகா பயிற்சிகள் மிகவும் உதவும்.