மழையில் நனைந்த ஆடையை அணிந்தால் பூஞ்சை தொற்று வருமா?

மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக பூஞ்சை தொற்று எளிதாக வரும். பூஞ்சைகள் தொற்று வந்தால் சரும பிரச்னைகள் தொடர்ந்து ஏற்படலாம்.

அவை வர ஒரு முக்கிய காரணமாக ஆடை இருக்கிறது. மழையில் நனைந்த ஆடை மற்றும் காலணிகள் ஒரு வித ஈரத்துடன் இருக்கும். அவற்றை அணியும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மழைக்காலத்தில் துணிகள் உலர அதிக நேரம் எடுக்கும். துணிகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருந்தால் உலர அதிக நேரம் பிடிக்கும் என்பதால் ஆடைகளை , ஹேங்கரில் மாட்டி வைப்பதே சிறந்தது.

எளிதில் காயும் தன்மை உடை எடை குறைவான மற்றும் ஈரத்தை நன்கு உறிஞ்சும் ஆடையை தேர்வு செய்யுங்கள்.

பட்டு சேலை, ஜீன்ஸ் போன்ற அதிக எடை கொண்ட உடைகளை தவிர்க்க வேண்டும்.

ஈரத்துணியால் சளி, காய்ச்சல் வரக்கூடும் என்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முடிந்தளவு பையில் ஒரு செட் மாற்று உடையை எடுத்து செல்லலாம்.

கனமழை சமயத்தில் சாலையில் இருக்கும் சகதிகள், கழிவு நீர் போன்றவற்றில் ஆடைப்படாமல் இருக்க பாதம் வரை தொடும் ஆடைகளை தவிர்க்கலாம்.